NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு !

 


தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks Branch Postmaster Assistant Branch Postmaster ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 30041 Posts பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் உள்ளன.





தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அஞ்சல்துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க:-  https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:   23.08.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

Post a Comment

0 Comments