தமிழ்நாடு சிலம்பாட்டம் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டம் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நண்பர்கள் சிலம்பக் கூடத்தை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர் G.S.சேஷாத்ரி தனித்திறைம (சிலம்பம்) தங்கமும் கம்பு சண்டை பிரிவில் வெண்கலம் வென்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்.
தங்கம் வெண்கலம் வென்று தேசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ள சிலம்பாட்ட விளையாட்டு வீரர் G.S.சேஷாத்ரிக்கு திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு சான்று மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர் ஆறுமுகம் அப்துல் பாரூக் சமூக செயற்பாட்டாளர் ஆர்மஸ்டாராங் ராபி அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் தின சேவை அறக்கட்டளை தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் நண்பர்கள் சிலம்ப கூடத்த்தை சேர்ந்த சிலம்ப ஆசான் சண்மூகசுந்தரம் யுவராஜ் மற்றும் தேசிய மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்


.jpeg)
0 Comments