தூத்துக்குடி மாநகரம் தாளமுத்துநகரில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையில் முடிந்த சம்பவத்தில், காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் பேனர் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் நிர்வாகியான, சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் பாலமுருகன்(40) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக பேனர் வைப்பது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட வாய்த்தகராறைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய சிவச்சந்திரன், சிவகுமார், மணிகண்டன் மற்றும் பார் ரவி (எ) பொன்பாண்டி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.இதுதொடர்பாக தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.


0 Comments