ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி என்ற துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் திருச்சி ஒத்தக்கடை டிஜே அருகில் நடந்து வருகிறது. கடந்த ஏழு வருடங்களாக நடந்து வரும் இந்த அகாடமி, திருச்சியின் முதல் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் அகாடமி ஆகும். 50 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு திருச்சி ரைஃபிள் கிளப் என்ற பெயரில் துவக்கப்பட்டு இயங்கி வந்த, தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைபிள் கிளப்பின் கீழ், இது இயங்கி வருகிறது. இதன் மூலம் மாநில மற்றும் தேசிய அளவில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல வீரர்கள் உருவாக்கப்பட்டு, பல பதக்கங்களை வென்றிருக்கின்றனர். சிறந்த தகுதி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு இது நடத்தப்பட்டு வருகிறது. 9 வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் இந்த அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கமான இங்கு, ஏர் ரைபிள் மற்றும் ஏர் பிஸ்டல் பயிற்சி பெறலாம்.
30 வருடங்களுக்கு முன் குடியிருப்புகளில் குழந்தைகள் ஓடி விளையாட காலியிடங்கள் மைதானங்கள் இருந்தன. ஆனால் இக்கால குழந்தைகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை. எனவே அவர்கள் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் இது அவர்களது கண், உடல், நரம்பு மண்டலம், குணம் ஆகியவற்றை பாதிக்கிறது; மன அழுத்தத்தை தருகிறது. இச்சூழலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும் வயது வந்தவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு ஆரோக்கியமான ஓர் விளையாட்டு தேவை. பல நன்மைகளை தரக்கூடிய அத்தகைய ஓர் அற்புதமான விளையாட்டுதான் துப்பாக்கி சுடும் விளையாட்டு. இவ் விளையாட்டு அதில் பங்கேற்பவர்களுக்கு உற்சாகம் தன்னம்பிக்கை கவனக்குறைப்பு போன்ற நன்மைகளை தருகிறது.
துப்பாக்கி சுடும் விளையாட்டு ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஓர் விளையாட்டாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் சாமானிய மக்களும் கலந்து கொண்டு வெற்றி பெறக் கூடிய ஒரு விளையாட்டாக வளர்ந்து இருக்கிறது. இது சற்றே செலவு பிடிக்கக் கூடிய விளையாட்டாக இருந்தாலும் இதில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் விளையாட்டு, சற்று செலவு குறைந்ததாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவிலேயே பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும்.
பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இவ்விளையாட்டை பயிற்றுவிக்க துப்பாக்கி சுடும் விளையாட்டு நம் நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு ஆகும் ஒருவரின் தனிப்பட்ட திறமையை வெளிக் கொணரும் இவ் விளையாட்டு 9 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த விளையாட்டாகும் இவ்விளையாட்டில் கலந்து கொள்ள அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எண்பது வயதிற்கு மேல் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுபவர்களும் இருக்கிறார்கள். விருப்பமும் திறமையும் முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இவ்விளையாட்டில் உயரிய இடத்தை பெற முடியும். திறமை உள்ளவர்கள் ஒரே வருடத்திற்குள் தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற முடியும் எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் சொந்த திறமையிலேயே ஒருவர் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முடியும்.
ஒலிம்பிக் போட்டிகளில் நம் பாரத நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை பெற்றுத் தந்து வரும் ஒரு முக்கிய விளையாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டாகும். இவ்வருடம் ஜூலை மாதம் பாரீசில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்க நம் இந்திய நாட்டின் 21 துப்பாக்கி சுடும் வீரர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இது இதுவரை இல்லாத ஓர் சாதனையாகும்.
******
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்



0 Comments