NEWS UPDATE *** மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, ஆய்வாளர் உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி. நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரி காவல் அதிகாரிகள் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சிறந்த ஆசிரியர்களுக்கான "விருதுகள் 2026" விழா திருச்சியில் நடைபெற்றது



ஆசிரியர்களின் சேவையை போற்றும் வகையில், பிக்லேர்ன் மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து சிறந்த ஆசிரியர் விருதுகள் 2026 விழா திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.









இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி பேராசிரியர் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் சிறப்புரை ஆற்றி, கல்வித்துறையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் பிக்லேர்ன் நிர்வாக இயக்குனர் கே.சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

கேர் கல்லூரி கல்வித்துறை டீன் முனைவர் கே.அலெக்ஸ் மற்றும் தங்கம் பள்ளி தாளாளர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கன்மலை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜே.வில்பர்ட் எடிசன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments