தமிழக பாஜ க தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமியை கண்டித்து திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார் . முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் , பீமநகர் மண்டல தலைவர் குருராஜன் , செய்தி தொடர்பாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்துகொண்டனர் .
இதில் இருவரது உருவ படங்களை எரிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து படங்களை பறித்தனர் . இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு பின்னர் அனைவரும் களைந்து சென்றனர் .
*****
L.பாபுதலைமை செய்தியாளர்




0 Comments