22/02/26
140 அடி உயர வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன்
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள திடலில் ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பாக மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரம்பிள்ளை திருவுருவ சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து
1. கப்பலோட்டிய தமிழன் திரு.வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மதுரை மாநகரில் அமையவுள்ள, 140 அடி உயர திருவுருவ சிலைக்கு, தன் பொற்கரங்களால் அடிக்கல் நாட்டிய, இந்திய குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, ஏ.சி.எஸ். அறக்கட்டளை சார்பிலும், தமிழக மக்கள் மற்றும் மதுரை மக்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.
2. இந்திய விடுதலை போராட்டத்தில், செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உசி. அவர்களின் ஈடுயிணையற்ற தியாகத்திற்கு, நன்றி செலுத்தும் விதமாக மத்திய அரசு, அவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கி சிறபிக்க வேண்டும் என்று மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
3. மனிதருள் புனிதராம், தமிழகத்தின் தவப்பயன் வ.உசி. அவர்களின் தேசபக்தியை, வருங்கால சந்தியினரும் அறிந்து கொள்ளும் வண்ணம், நாடாளுமன்ற வளாகத்தில், அன்னாரது முழுஉருவ வெண்கல சிலையை அமைத்திட வேண்டுமென்று மத்திய அரசை ஏ.சி.எஸ். அறக்கட்டளை மற்றும் தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
4. சென்னை, பெரம்பூர், கந்தன் தெருவில் தன் வாழ்நாளில் கடைசியாக ஐயா வ.உ.சி. அவர்கள் வாழ்ந்த வீடு, சிதலமடைந்து உள்ளது. அந்த வீட்டினை தமிழக அரசு வாங்கி வ.உ.சி நினைவாலயம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜயகுமார்,சுந்தர்.சி, அருணாசலமுதலியார், ஆதினம், PTR தனவேலன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
________________
செய்தியாளர்
சையது


0 Comments