தேர்தல் பணி தீவிரமாக அமைய வேண்டும்.திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகரக் செயலாளர் மு.மதிவாணன் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா ,பகுதி செயலாளர். மோகன் மற்றும் , மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திமுகத்தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆலோசணைப்படி மாவட்ட செயலர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்னவென்றால் நாளைய தினம் துவங்கப்படவுள்ள "ஸ்டாலின் மகளிர் பிரச்சாரப் படை" மூலமாக நாம் ஒவ்வொருவரும் இல்லம் தோறும் நமது அரசு சாதனைகளை எடுத்து கூற ஏதுவாக சில வழிமுறைகளை தலைமைக் கழகம் வழங்கி உள்ளது அதன்படி பொது மக்களிடம் நாம் மிகுந்த பக்குவமாக எடுத்துக்கூறி அத்தனை பேரையும் நாம் நெறிமுறைகளோடு கையாள வேண்டும்.


0 Comments