திருச்சி பிப் 22-
அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி, அனைத்து குயவர்கள் நல சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி தேசிய தலைவர்,அனைத்து குயவர்கள் நல சங்க தலைவர் டாக்டர் சாலை சாதியன் தலைமை தாங்கி பேசும் பொழுது குயவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது, குறிப்பாக எங்களுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.ஆகவே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மணல் அள்ளுவதில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறதஒரு வருடத்திற்கு வேண்டிய மண்ணை சேர்த்து வைத்தால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நாங்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியும்.நாங்கள் மண்ணை சேகரித்து வைக்க குடோன் அமைத்து தர வேண்டும்.
குயவர்கள் நல வாரியத்தில் தலைவர் பதவி போடாமல் இருக்கிறது அந்த பதவியை எங்கள் சங்கத்திற்கு வழங்கினால் நிச்சயம் குயவர் மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் -எடப்பாடி யார் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிமுக அதிமுக ஆட்சி மலர வேண்டும் அதற்கு நாங்கள் முழு மனதோடு பணியாற்றி வெற்றியை தேடி தருவோம் என்று பேசினார்,
மாநாட்டில் தமிழ்நாடு அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி மாநில தலைவர் சாலை செல்வமணி முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி ஈரோடு மாவட்ட தலைவர் சூரியா வடிவேல் வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசும் பொழுது,
மண்பானை செய்யும் குயவர்கள் கலைத்திறன் மிக்கவர்கள் விஞ்ஞானிகள் படித்து பட்டதாரி ஆகிறார்கள். ஆனால் இயற்கையாக பிறவியில் குயவர்கள் விஞ்ஞானிகளாக உருவாகி உள்ளனர். தங்களுடைய 10 விரல்களைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை செய்து காட்டும் திறமை உங்களிடம் உள்ளது.பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி காலத்தில் என்னுடைய சிவகங்கை மாவட்டத்தில் குயவர்கள் தொழில் செய்ய மண் பானைகளை எடுக்க இலவசமாக பாஸ் வழங்கினேன் ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் பாஸ் வழங்காமல் மண் அள்ள பணம் வாங்கி வருகின்றனர்.காலம் மாறும் நீங்கள் உழைக்கக் கூடியவர்கள் . உழைப்பவர்களுக்கு அதிமுக எப்பொழுதும் மதிப்பு அளிக்கும்.குயவர்களுக்கு அதிமுக துணையாக இருக்கும்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உங்களுக்கு பாதுகாவலராக இருப்பார்.இன்றைக்கு உங்களை ஒதுக்கி விட்டு பெரிய ஓட்டல்கள் வந்துள்ளது. ஆனால் அந்த ஓட்டல்களில் இன்றைக்கு மண் பானை சோறு கிடைக்கும் என்று தனியாக பலகை வைக்கின்றனர்.
உங்களை யாரும் வெறுக்க முடியாது. ஒதுக்க முடியாது. உங்களைத் தேடி வருகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்று பேசினார்.
மாநாட்டில் குயவர் இனத்தில் பிறந்து 56 நாடுகள் ஆண்ட பேரரசர் சாலி வாகனுக்கு மாவட்டம் வாரியாக சிலை அமைக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு ரூபாய் 10,000 உதவி தொகை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சூளை வைக்கும் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குயவர் இனத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிடம் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் குயவர் சங்கத் தலைவர் அமல்ராஜ்,பெருமாள் பிச்சை,
அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி சட்ட ஆலோசகர்,சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் ,
தேசிய மகளிர் அணி துணைத் தலைவி ரஞ்சிதா, மாநில பொருளாளர் சாலை அலங்காரன், மாநில இளைஞரணி தலைவர் வினோத்குமார்,மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் ராஜ்மோகன்,மாநில செயலாளர் சுப்புராஜ்,மாநில செயற்கை உறுப்பினர் குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் முசிறி ஒன்றிய செயலாளர் பிரபு நன்றி கூறினார்.மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அகில இந்திய குயவர் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவர்கள் நல சங்கம், அனைத்து குயவர்கள் நல சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments