NEWS UPDATE *** தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி என்ற வழக்கில் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் அன்பில் மகேஷ் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் தீபத் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் மாணவ மாணவிகள் பாதுகாப்பான “தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல் மற்றும் வாகனத்தில்” விழிப்புணர்வு பிரச்சாரம்



திருச்சியில் தீபத் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் மாணவ மாணவிகள் பாதுகாப்பான “தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல் மற்றும் வாகனத்தில்” விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது !








திருச்சி மாவட்டம் விபத்து தடுப்பு சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் அவர்கள் தீபத்திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் மாணவ மாணவிகள் தீ விபத்தில்லா பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்கள் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு மற்றும் திருச்சி முதல் கங்கை கொண்டான் வரையில் வாகன பிரச்சாரம் விழிப்புணர்வு துவக்க நிகழ்வு தமிழ்நாடு தீத்தடுப்பு மீட்பு பணி மைய வளாகத்தில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி மாவட்ட தீயணைப்பு மீட்பு . பணி மைய உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் பொதுநல சேவையாளர் சீனிவாச பிரசாத் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி வைத்தார் தேசிய விருதாளர் திரைப்பட நடிகர் மாற்றம் அமைப்பு நிறுவனத் தலைவருமான ஆர். ஏ. தாமஸ், சாய் பாலாஜி, ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.




தீபத் திருநாளான தீபாவளியை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில், பொதுமக்களிடையே தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது, குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பது, அருகில் தண்ணீர் மற்றும் மணல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்திருப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து விலகி இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்; எரிந்து முடிந்த பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்கக் கூடாது; பட்டாசுகளைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது; மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் விலங்குகள் உள்ள பகுதிகளில் ஒலி மாசுபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.




“விபத்தில்லா தீபாவளி – பாதுகாப்பான தீபாவளி – மகிழ்ச்சியான தீபாவளி” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தீபாவளி மகிழ்ச்சியின் திருநாளாக அமையட்டும்! தீ விபத்துகள் இல்லாத பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவோம்!

பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்; மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வோம் என்றனர்.

திருச்சி மாவட்ட மீட்பு பணி நிலைய அலுவலர் போக்குவரத்து சரவணன் தீயணைப்போர் ஓட்டி சார்ஜின் பாலசுப்பிரமணியன் மகேஸ்வரன் பழனியப்பன் தீயணைப்பு சிவராமன் முத்துப்பாண்டி பாலமுருகன் நாகூர் பிச்சை சந்திரசேகர் ராஜேஷ் சிவகுருநாதன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்*

Post a Comment

0 Comments