NEWS UPDATE *** தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி என்ற வழக்கில் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் அன்பில் மகேஷ் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

 

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில்  இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. 



திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்   யோகா ஆசிரியர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். 



நிறுவனர் நாசர், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் குத்புதீன், முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்து பேசுகையில்,

இலங்கை நாட்டின் மிக நீளமான  அஞ்சல் தலை கண்டி எசாலா பெரஹரா  திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 20, 2024 அன்று வெளியிடப்பட்டது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் தலை 205 மில்லிமீட்டர் (8.1 அங்குலம்) நீளம் கொண்டது. இது வெளியிடப்பட்ட சமயத்தில் உலகிலேயே மிக நீளமான அஞ்சல் தலையாக உலக சாதனை படைத்தது.கண்டியின் புகழ்பெற்ற ஸ்ரீ தலதா மாளிகை பெரஹரா ஊர்வலத்தையும், அலங்கரிக்கப்பட்ட யானைகளையும் சித்தரிக்கும் வகையில் இந்த அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நினைவார்த்த அஞ்சல் தலையின் மதிப்பு 500 இலங்கை ரூபாய் ஆகும்.இதற்கு முன்னதாக, இலங்கையின் மிக நீளமான அஞ்சல் தலையாக 'வைஸ்ராய் லக்ஸரி'  என்ற நிலக்கரி நீராவி இரயிலின் 25 ஆண்டு சேவையை முன்னிட்டு வெளியிடப்பட்ட 123 மிமீ நீளமுள்ள அஞ்சல் தலை இருந்தது என்றார்

Post a Comment

0 Comments