திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்
இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொகுதி சட்டமன்ற உறுப்பினரான துணை சபாநாயகர் ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தீபாவளி அன்று ஞாயிற்றுக்கிழமை அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக்குமார், அங்குள்ள துணை சபாநாயகரின் வீட்டின் அருகே அவரை நேரில் சந்தித்து தன் பகுதிப் பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக் குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய துணை சபாநாயகர், அவரைச் சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்து விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், “நான் தளபதிக்குத் தான் வாக்களித்தேன்” எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயரைப் பலமுறை உச்சரித்தும், அத்தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக் குமார், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று காலை வீடு திரும்பினார்
பொதுமக்களிடம் துணை சபாநாயகர் இதுபோன்று அடாவடியில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே, சம்பவம் தீவிரமடைந்ததை அறிந்த துணை சபாநாயகரின் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக மருத்துவமனைக்குச் சென்று சம்மந்தப்பட்ட நபரிடம் சமாதானம் பேசியதாகவும், இச்சம்பவம் தவறுதலாக நடந்த ஒன்று என விளக்கமளித்து சமரசம் செய்து அவரை வீட்டுக்கு கொண்டு சென்று சேர்த்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் நேற்று காலை துணை சபாநாயகர் ரவிசங்கர் சம்பந்தப்பட்ட கார்த்தியை சந்தித்து மீடியாக்கள் முன்பு மேற்கண்ட சம்பவமே நடைபெறாதவாறு பேச வைத்து பேட்டி கொடுக்க வைத்துள்ளார்
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக்குமார், உயர் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்ந்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நகராட்சியிலும் சட்டமன்ற அலுவலகத்திலும் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் தான் துணை சபாநாயகரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கச் சென்றேன். ஆனால், அவர் என்னை மிகக் கொடூரமாகத் தாக்கிவிட்டார். அதன் பிறகு, மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் கிருபாநிதி என்னை வலுக்கட்டாயமாக துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு துணை சபாநாயகரும் ஆய்வாளரும் இணைந்து நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவோம் என மிரட்டினர். அவர்கள் எழுதி கொடுத்த வசனங்களை பேச வைத்து அந்த வீடியோவை பதிவு செய்தனர். எனது உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே வேறு வழியின்றி பயந்து அவ்வாறு பேசினேன். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கார்த்திக் குமார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எதிராக விர்ச்சுவல் வாரியர்சும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். ‘நீங்களாக விலகாவிட்டால் ராஜினாமா செய்ய வைப்போம்’ என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் விஜய் இதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்


0 Comments